Saturday, 30 July 2011

எனக்கு பிடித்த கவிதை

எனக்கு
பிடித்த கவிதை
என்னவளின் பெயர்!!!!!!!!!!

Thursday, 28 July 2011

புரக்கணிக்கிறதாம்

அன்பே
உன்னை சேலைகட்டி யார்
வீதி உலா வரசொன்னது
உன்னை பார்த்த பிறகு - பாவம்
நிலவினை கூட வானம்
புரக்கணிக்கிறதாம் மாதத்தில்
மூன்று நாட்கள் அம்மாவாசையாய்!!!!!!!!!!!!!!

Wednesday, 27 July 2011

மின்தட்டுப்பாடு

அன்பே தமிழகத்தில் மின்தட்டுப்பாடாம்
அண்டை மாநிலங்களிடம்
கடனாய் கேட்கிறார்களாம்
 தட்டுப்பாட்டை குறைக்க
பாவம் அவர்களுக்கு
தெரியவில்லை போலும்
உன் பார்வையில் உள்ள
மின்சாரத்தை பற்றி!!!!!!!!!!!!!!

முறைகேடாம்

அய்யகோ
அலைவரிசை ஒதுக்கியதில் முறைகேடாம்
என்னவளே நீ கைபேசி-வழியே
எனக்கு தந்த முத்தங்களை
கணக்கெடுத்து சொல்
குறைகிறதா என்று பார்க்கிறேன்
குறைந்தால் நானும் நீதி
மன்றத்தில் வழக்கினை தொடுப்பேன்
 நீ தந்த முத்தங்கள் முழுமையாக
எனக்கு வந்து சேரவில்லை என்று!!!!!!!!!!!!!!!!

Tuesday, 26 July 2011

மோட்சமாவது அடைந்திருப்பேன்

கவிதைகள் மட்டுமே
உனக்கு பிடிக்கும் என்று
முன்னரே தெரிந்திருந்தால்
இத்தனை காலம்
காத்திருந்திருக்க மாட்டேன்
எப்படியேனும்
ஒரு கவிஞனின் கற்பனையில் புகுந்து
அவனது பேனா மையில் பிறந்து
உன் ரசனையில் சில நிமிடமேனும்  வாழ்ந்து 
குப்பை தொட்டியில் மோட்சமாவது அடைந்திருப்பேன்
கசங்கிய காகிதமாக!!!!!!!!!!!!!!!!

என்ன நீதி

என்ன நீதி
எதிர்வீட்டு குழந்தை
தவறு செய்தால் மட்டும்
முத்தம் தந்து திருத்துகிறாள்
ஆனால் நான்  மட்டும்
தவறு செய்தால்
விழிகளால் பேசி மிரட்டுகிறாள்!!!!!!!!!!!!!!!!

Sunday, 24 July 2011

போட்டி

முகில்களே தயவு செய்து
என்னவள் வருமுன்
கலைந்து போய்விடுங்கள்-இல்லை
என்னவள் கார்குழலுடன்
போட்டி போட்டு தோற்றபின் தான்
கலைவேன் என்றால் சரி
பொருத்திருங்கள் ஒரு வேளை
போட்டியில் தோற்றபின்
தயவு செய்து தற்கொலை
செய்து கொள்ளாதீர்கள்
பாவம் உங்களை நம்பி-இவ்வுளகில்
பல உயிர்கள் உண்டு!!!!!!!!!!!!!

பூமுடிக்கிறளாம்

என்னவள் பூமுடிக்கிறளாம்
என்ன ஆச்சரியம்
ஒரு பூ இன்னொரு
பூவை முடிகிறதாம்!!!!!!!!!!!!

Saturday, 23 July 2011

வளர்பிறை நிலவாய்

நீ கடித்து துப்பிய
நகத்தினை எப்பொழுது எனக்கு
தெரியாமல் வானிற்கு
கடனாக தந்தாய் இப்படி
உலகறிய  இன்று வானில்
கம்பிரமாய் உலா வருகிறது
வளர்பிறை நிலவாய்!!!!!!!!!!!!

Friday, 22 July 2011

வீணை

உன் விழிகளுக்கு
எப்போது வீணை
மீட்க கற்று கொடுத்தாய்
இப்படி விடாமல் மீட்டுகிறது
என் இதயத்தை
லப்டப் என்று!!!!!!!!!!!

தயிர் சாதம்

அன்று  நீ எனக்காக
அறுச்சுவை உணவினை
படைப்பாய் என்று எதிர்பார்தேன்.....
சாப்பிட்டு முடித்த பிறகு
எப்படி இருந்த என்றாய்
நானும் சிரித்து கொண்டே
அமிர்தம் என்றேன் ஆனால்
அன்று நீ படைத்து
என்னவோ தயிர் சாதம் தான்!!!!!!!!!!!!!

Thursday, 21 July 2011

அழுகிறது வானம்

அன்பே
உன்னை காணாததால் என்னவோ
கடந்த இரண்டு நாட்களாக -இப்படி
விடாமல் அழுகிறது வானம்
மழையாய்!!!!!!!

புன்னகை

உன் இதழ்கள் செய்யும்
மகரந்த சேர்க்கை
புன்னகை!!!!!!!!!!!

Wednesday, 20 July 2011

இதழ்கள் பத்திரம்

என்னவளே உன் இதழ்கள் பத்திரம்
உன் குரலின் இனிமையை
எங்கிருந்தோ ஒட்டு கேட்ட
வண்டுக்கள் என்னை நச்சரிக்கிறது
உன் முகவரியை கேட்டு
அவைகளும் உன் இதழ்களில்
தேனை குடிக்க வேண்டுமாம் !!!!!!!!!!!!

சிணுங்கள்

ஏழு சுரங்களில்
தேடி பார்த்தேன்
இதுவரை என்னால்
கண்டுபிடிக்க முடியவில்லை
உங்களால் முடிந்தால்
கண்டுபிடித்து கூறுங்கள்
என்னவளின் சிணுங்கள்
எந்த சுரத்தை
சார்தது என்று!!!!!!!!!!!!!!!!

Monday, 18 July 2011

எனக்கோ இன்னும் விளங்கவில்லை

அன்று
சற்று அமைதியாய்
நான் உன்னிடம்
என்ன பிடிக்கும் என்றேன்
நீயோ சற்றும் யோசிக்காமல்
பூக்கள் என்றாய்
எனக்கோ இன்னும் விளங்கவில்லை
எப்படி
ஒரு பூவிற்கு இன்னொரு
பூ பிடிக்கும் என்று!!!!!!!!!!!!!!

Sunday, 17 July 2011

பருக்களாக

என்ன ஆச்சரியம்
பகலினில் கூட
நட்சத்திரம் ஜொலிக்கிறதே
என்னவளின் முகத்தில்
பருக்களாக!!!!!!!!!!!!!!

Saturday, 16 July 2011

என்ன ஆச்சரியம்

என்ன ஆச்சரியம்
வைரசும் என்னவளை
காதலிக்கிறது போலும்
கடந்த ஒரு வாரமாக
என்னவளுக்கு வைரஸ் காய்சலாம் !!!!!!!!!!!!!

Friday, 15 July 2011

உனக்கு புரியவில்லையா

சகியே
என் எழுத்துக்கள்
ஒவ்வொன்றையும் கவிதை என்றாய்
ஏன் உனக்கு புரியவில்லையா
அந்த எழுத்துக்களின் பொருள்
நீ என்று!!!!!!!!!!!!

Thursday, 14 July 2011

அவளை பிடிக்குமா

அவள் கூந்தலில் சூடியிருந்த
மலரிடம் கேட்டேன்
அவளை பிடிக்குமா என்று
மௌனமாக சிரித்தது தன்
இதழ்களை விரித்து
அவள் காலில் அணிந்திருந்த
கொலுசிடம் கேட்டேன்
அவளை பிடிக்குமா என்று
மௌனமாக சிரித்தது தன்
மணிகளை உரசி
இரண்டும் என்னிடம் கேட்டது
உன்னை  எனக்குபிடிக்கும் - என்று
நானும்  மௌனமாக சிரித்தேன்
அட
காதலில் மௌனமான சிரிப்பதற்கு
அர்த்தம் ஆம் என்பதாமே!!!!!!!!!!!!!!!!

Tuesday, 12 July 2011

வெட்கம்

என்னவள் வெட்கபடும் போதெல்லாம்
தோற்று போகிறதாம்- அவள்
கூந்தலில் இருந்த ரோஜா 
பாவம் அவளின் கண்ணத்தின்
சிவப்பிற்கு ஈடுகொடுக்க முடியவில்லையாம்!!!!!!!!!!!

Monday, 11 July 2011

ஏளனம்

அதுவரை பூக்காத என் வீட்டு
பூக்கள் எல்லாம்
அவள் என் வீட்டிற்கு வந்து சென்ற
நாட்கள் முதல் அவளுக்காக
தினம் தினம் பூத்து கொண்டே உள்ளது
எனக்கோ காரணம் புரியவில்லை
ஒருவேளை என்னவளின் ஸ்பரிசம்
தீண்டியதால் என்னவோ இப்படி
என்னை பார்த்து சிரிக்கிறது
ஏளனமாய் தினம் தினம்!!!!!!!!!

Sunday, 10 July 2011

வரம்

நான்
பூவாக பிறக்க
வரம் கிடைத்திருந்தால்
ஒரு பொழுதோனும்
உன் கூந்தலில்
வசித்து வாடும்
வரத்தினையும் சேர்த்து
கேட்டிருப்பேன் கடவுளிடம்!!!!!!!!!!!

விடியாத இரவொன்று வேண்டும்

என்
கனவில் வந்த
நினைவுகள் யாவும்
நிஜங்களாய் மாறும் -வரை
விடியாத இரவொன்று வேண்டும்!!!!

முடிந்தால் கற்றுக்கொடு

உன் விழிகளுக்கு
யாரடி கவிதை
எழுத கற்றுக்கொடுத்தது
இப்படி ஒரே பார்வையில்
ஓராயிரம் கவிதை ஏழுதுகிறதே
முடிந்தால் என்
விழிகளுக்கும் கற்றுக்கொடு
எங்கே பார்க்கலாம்
உன் விழிகளோடு
போட்டி போட
முடியுமா என்று!!!!!!!!!

முதல்பார்வை

என்ன ஆச்சரியம்
உதடுகளால் மட்டுமே
பேசமுடியும் என்ற
என் எண்ணத்தை
உன் முதல்பார்வை
மாற்றிவிட்டது!!!!!!!!!!!!!

உன்னை கண்ட மறுநொடி

என்ன ஆச்சரியம்
அந்த நிமிடங்கள் வரை
லப்டப் என துடித்துக்கொண்டிருந்த
என் இதயம்
உன்னை கண்ட மறுநொடி
என்னை கேட்டாமலே
உந்தன் பெயரை சொல்லி
துடிக்க ஆரம்பித்துவிடுகிறது!!!!!!!!!!!!!!

வா சொல்லி பார்க்கலாம்

நான் நீ என்று சொன்னால்
உதடுகள் ஒட்டாதாம் எங்கே
வா சொல்லி பார்க்கலாம்
நம் இதழ்களை சேர்த்து!!!!!!!!

அலைகளும் ஏமாந்து போனது

நீ வருகிறாய் என்று
என்னை ஏமாற்றிய நாட்களில்
ஏமாந்து போனது
நான் மட்டும் அல்ல
இந்த கடற்கறையில் நீ
என்னோடு நடைபயிலும் நேரங்களில்
நமக்கு தெரியாமல்
உந்தன் பாதசுவடுகளை திருடி
செல்லும் அலைகளும் கூட!!!!!!!!!!!!!!

Friday, 8 July 2011

முடிந்தால் கற்றுக்கொடு

உன் விழிகளுக்கு
யாரடி கவிதை
எழுத கற்றுக்கொடுத்தது
இப்படி ஒரே  பார்வையில்
ஓராயிரம் கவிதை ஏழுதுகிறதே
முடிந்தால் என்
விழிகளுக்கும் கற்றுக்கொடு
எங்கே பார்க்கலாம்
உன் விழிகளோடு
போட்டி போட
முடியுமா என்று!!!!!!!!!

Sunday, 3 July 2011

அழுகிறது வானம் மழையாய்

அன்பே!
உன் சோகத்தை என்னிடம்
நேரடியாக சொல்லியிருக்கலாம்
ஏனடி தென்றலிடம் சொல்லி தூது சொன்னாய்.........
தென்றல் என்னிடம் சொல்லாமல்
ஒருவேளை வானத்திடம் சொல்லிவிட்டதா என்ன?
இப்படி விடாமல் அழுகிறது வானம் மழையாய் !!!!!!!!!!

சண்டை

அன்று பூக்கடையில் நின்று 
நீ பூக்காரியிடம் பூவின் விலைக்காக 
சண்டைபோட்டு கொண்டு இருந்தாய் 
நானோ அதனை பார்த்து வியந்து- நின்றேன்
என்ன ஆச்சரியம் 
அந்த பூக்கடையில் ஒரு பூ
மற்றெரு பூவிற்காக சண்டைபோடுகிறது!!!!!!!

எதிரி

தனிமை தான் எதிரி
என்றிருந்தேன் இப்போது
புரிந்தது அது
உன் நினைவுகள் என்று!!!!!!!!!

மருந்து

நீ வருவாய் என காத்திருந்து
ஏமாந்து போன இதயத்திற்கு
மருந்தாகிறது உன்னோடு வாழ்ந்த
என் இறந்தகால நினைவுகள்....

ஆறுதல்

தூக்கத்தை மறந்து
துக்கத்தில் அழும்போது
ஆறுதலாய்
என் விழிகளில்
உன் நினைவுகள்.......

அதிசயம்

பூத்து குழுங்கும் பூக்களையும்
ஆற்றில் குதித்தாடும் மீன்களையும்
சுதந்திரமாய் சுற்றிதிரியும் மேகங்களையும்
சேற்றினில் மலரும் செந்தாமரையையும்
அறிவியலை மிஞ்சும் இயற்கையையும்
உன்னோடு ஒப்பிட்டு பார்த்தால்
பெண்ணே
நீயும் ஓர் அதிசயம் தான்!!!!!!!!!!

நியாயமா

என்ன விந்தை நீ
காலையில் கடந்து செல்லும்
பாதையில் உள்ள பூக்கள் எல்லாம்
உன்னை பார்த்ததும் சிரிக்கிறது ஆனால்
என்னை பார்த்தால் மட்டும்
இப்படி முறைக்கிறது மாலையில் !!!!!!!!!!!!

என் பேச்சு

உன்னோடு பேசும்
ஒவ்வொரு வார்த்தையையும்
கவிதை என்றாய்
ஏன்
உனக்கு புரியவில்லையா
என்னை பேச வைப்பது
நீ என்று!!!!!!!!!!!!!!!!!

Saturday, 2 July 2011

காதலி

இதயம் என்னும் தேன்கூட்டை
விழிகளில் நாணேற்றி
காதல் என்னும் அம்பெய்தி
கலைத்துவிட்டவள்!!!!!!

Friday, 1 July 2011

முன்னெச்சரிக்கை

என்னவளே ஜாக்கிரதை
ஏதோ  ஊரில்
சிலையை காணவில்லையாம்
எனக்குள் ஓர் பயம் - எல்லோரும்
எங்கே உன்னை தேடி
வந்து விடுவார்களா என்று!!!!!!!!!!!!!!!!!

அம்மாவாசை

இன்று அம்மாவாசையாம் அதனால்
நிலவு தெரியாதாம் - மூடர்களுக்கு
எப்படி புரிய வைப்பேன் - நிலவு
என்னருகில் அமர்ந்து  என்னோடு
காதல் புரிகிறது என்று!!!!!!!!!