Monday, 19 September 2011

கோபம்

கவிதை கூட கோபம் வரும் என்று
என்னவள் கோபப்படும் போது தான்
அறிந்து கொண்டேன்!!!!

அதிகமாக நினைக்கிறேன்

என்னை மறந்த அவளை
நானும் மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை என்ன ஆச்சரியம்
அவளை மறக்க நினைக்கையில் தான்
அவளை அதிகமாக நினைக்கிறேன்!!!

Thursday, 15 September 2011

அழகாய் இருக்கிறது

என் பெயரை மற்றவர்கள்
அழைப்பதை காட்டிலும்
அழகாய் இருக்கிறது
உன் உதடுகளினால்
உச்சரிக்கப்படும் போது...

Monday, 12 September 2011

காதலித்து பார்

கத்தியுமின்றி இரத்தமின்றி
யுத்தம் செய்ய வேண்டுமா
காதலித்து பார் !!!!!!!!!!

சுமை

புத்தகங்கள் கூட
எனக்கு சுமையாக தெரிந்தது
நீ புத்தகங்களை ஏந்தி வருகையில்!!!!!!!!!!!!!!!!

யாரடி நீ

கவிதைகள் எழுதும் போது வரிகளாய் வருகிறாள்
கற்பனை செய்யும் போது உருவமாய் வருகிறாள்
பாதையில் நடந்தாலும் நிழலாய் தொடர்கிறாள்
இருட்டினில் மறைந்தாலும் நினைவுகளாக தொடர்கிறாள்
யாரடி நீ தயவு செய்து உன் முக முகவரியை
காட்டிவிடு இல்லையோல் என் கற்பனைகள்
ஒன்று சேர்ந்து என்னை முழுநேர
கற்பனை கவிஞனாகவே மாற்றிவிடும் போலும்!!!!!!!!!!!!!!!!!

Saturday, 10 September 2011

புரியவில்லையா

வாழ்கைக்கும் மரணத்திற்கும்
அதிக தூரம் என்றாய்
ஏனடி புரியவில்லையா உனக்கு
நீ என்னை விட்டு
பிரியும் போது எல்லாம்
நான் மரணிக்கிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, 9 September 2011

அறியாமலே

புன்னகை என்னும் முகமூடியை
தூரத்தில் வரும்போதே போட்டுக்கொண்டு
நீ தேரென வீதியில் வரும்போது
என்ன ஆச்சரியம்
என்னை அறியாமலே
என் உதடுகள் புன்னகைக்கிறது
உனை பார்த்து…..
அப்போதே புரிந்து கொண்டேன்
எல்லாம் காதல் செய்யும் மாயம்!!!!!!!!!!!

Thursday, 8 September 2011

ஆச்சரியம்

அவளால் உச்சரிக்க பட்ட
என் கவிதைகள் அணைத்தும் - ஏனோ
என்னை பார்த்து ஏளனம் செய்கிறது
காரணம் கேட்டேன்
அவளின் விழிகள் அவைகளை
பார்த்து மௌனமாக சிரித்தனவாம்
என்ன ஆச்சரியம் என்னை
பார்க்காமல் தவிர்க்கும் அவள் கண்கள்
என் கவிதைகளை பார்த்து சிரித்தனவாம்
உண்மையாகவே ஆச்சரியம் தான் !!!!!!!!!!!!!!!!!

Wednesday, 7 September 2011

வரம்

என்னை பொருத்த வரை
காதல் என்பது
கடவுளின் வரம்
கிடைத்தவர்கள் அனுபவிக்க
கிடைக்காதவர்கள் ஏங்க!!!!!!!!!!!!!

காதலை எழுதுகிறேன்

என் நண்பர்கள் என் கவிதைகளை
படித்து விட்டு என்னை கேட்கிறார்கள்
கவிதையாய் எழுதுகிறாய் என்று
அவர்களுக்கு புரியவிட்டால் பரவாயில்லை
ஏனடி
இன்னும் உனக்கு கூட புரியவில்லையா 
நான் கவிதைகளை எழுதவில்லை
என் காதலை எழுதுகிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!

Tuesday, 6 September 2011

கொழுசு

கம்பன் வீட்டு கட்டுத்தரியும்
கவிபாடுமாம் நான் கேட்டதில்லை - ஆனால்
என்னவளின் கொழுசு கூட கவிபாடுகிறதே
அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடிக்கும் காவியமே பாடுகிறது!!!!!!!!!

Sunday, 4 September 2011

யார் அறிவார்

அவள் வீட்டில் கோலம் போடும் போது மட்டும்
ஏனோ வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது
எனக்கோ சந்தேகம் அவள் போடும் புள்ளி
கோலத்தை பார்த்து ஒருவேளை நாணி குறுகி
மேகம் என்னும் முந்தாணையாள் முகத்தை
மூடி கொள்ளுகிறது போலும் வானம்
ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்
யார் அறிவார் இப்பூவுலகில்!!!!!!!!!!

Saturday, 3 September 2011

ஏங்கி கிடக்கிறது

நெஞ்சினில் ஓராயிரம் எண்ணங்கள் உண்டு
அவளை பற்றி கூற என்ன செய்வேன்
இன்னும் அவள் என்னிடம் கூறவில்லை
காதலை ஏங்கி கிடக்கிறது மனசு
எப்போது கூறுவாள் என்று தினம் தினம்
தாய் வரவிற்கு காத்திருக்கும் குழந்தை போல்
பொறுத்திருந்து பார்க்கிறேன் என்று வரும்
அந்த தினமென்று!!!!!!!!!!!!!!

Thursday, 1 September 2011

பயம்

இன்று என்னவளை பிள்ளையார்
கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றேன்
அவளோ என்னிடம் ஏன் என்றால்
எனக்கோ எப்படி சொல்வதென்று
தெரியவில்லை இருந்தாலும் சிரித்து கொண்டே
சொன்னேன் எங்கே நீ பிள்ளையாரை
சுற்றப்போய் உன்னை பார்த்த பிறகு
பிள்ளையார் உன்னை சுற்றுவாரோ என்ற
பயம் என்றேன் அவளோ சிரித்து கொண்டே
சென்றாள் கோவிலின் எதிர் திசையில்!!!!!!!!!!!!!!